வணக்கம்

நாம் இந்த குருக்கள் டொட் கொம் என்ற இந்த இணையத்தை ஆரம்பித்ததன் முக்கிய நோக்கம் எமது இந்துசமய குருமார்களின் முன்னோடியாக விளங்கியவர் இலங்கை யாழ்ப்பாணம் அச்சுவேலி சிவாகம ஞானபானு சிவஸ்ரீ . குமாரசாமிக்குருக்கள் அவர்களின் வரலாற்றையும் சிறப்பையும் தருவதுடன் அவர்களால் எழுதப்பெற்ற சமஸ்கிருதம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளிவந்த வெளிவர இருக்கும் அத்துடன் மறுபதிப்புச் செய்யப்படவிருக்கும் நூல்களின் விவரத் தொகுப்புக்களை வழங்குவதுமாகும். மேலும் இவரைப் போன்று மூத்த சிவாச்சாரியர்களாக விளங்கிய பெரியோர்களின் விபரங்களைத் தருவதும் ஆகும்.

மேலும் குமாரசாமி குருக்கள் அவர்களின் வழிவந்தோரால் மீள அமைக்கப்பட்ட அமைப்பின் மூலம் பல சமய சமூகசேவை உதவி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் விவரங்களை ஆதரத்துடன் தந்து மக்களை மேலும் இம்முயற்சியில் ஆர்வப்படுத்த முயற்சிக்கினறோம்.

அத்துடன் எமது கலாச்சார சம்பிருதாய நிகழ்களுக்கான அனைத்து வித ஒழுங்கமைப்புக்களையும் மிகச் சரியான முறையில் வழிகாட்டி அவற்றை வழங்குவதும் எமது இவ் இணையத்தள நோக்கங்களாகும்.

எமது இணையத்தளத்துக்கு விஜயம் செய்த உங்களுக்கு நன்றி